மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை: ரூ.45 லட்சம் செலுத்திய பக்தர்கள்!
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் கார்த்திகை மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.45,99,214 பணமும், 118 கிராம் தங்கமும், 340 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கார்த்திகை மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், பொன், வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: ‘கேப்டன்’ ஆன ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’…!
தொடர்ந்து, கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர் உண்டியலில் வரப்பெற்ற காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காணிக்கை எண்ணும் பணி வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. இறுதியில் ரூ.45,99,214 ரொக்கம், 118 கிராம் தங்கம், 340 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றுள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.