கார்த்திகை தீபத்திருவிழா | பூக்களின் விலை உயர்வு!..
கார்த்திகை தீபத்தையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவள்ளது.
மேலும், முல்லைப்பூ நேற்று 800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ நேற்று 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1200 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிச்சி பூ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1000ரூபாய்க்கும், சம்மங்கிப்பூ 150ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 800ரூபாய்க்கும், அரளி ௪௦௦ ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.