For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் கார்த்தி செல்ஃபி!

02:52 PM Jan 30, 2024 IST | Web Editor
படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் கார்த்தி செல்ஃபி
Advertisement

‘96’ பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 27 வது படம் உருவாகி வரும் நிலையில்,  இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கார்த்திக் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Advertisement

பருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி,  தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி.  தற்போது கார்த்தி 4-5 படங்களில் கமிட் ஆகியுள்ளார். கார்த்தியின்  27 வது திரைப்படத்தை  ‘96’ இயக்குநர் பிரேம் குமார் இயக்கி வருகிறார்.  6 ஆண்டுகளுக்கு பிறகு பிரேம்குமார் கார்த்தியை  வைத்து படம் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண்,  அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

96 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது போல்,  இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இப்படத்திற்கு மெய்யழகன் என பெயரிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  இப்படத்தின் கதாநாயகியாக தனியார் தொலைக்காட்சியின் சீரியல் நடிகை நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களோடு நடிகர் கார்த்தி புகைப்படம் எடுத்து கொண்டார்.

Advertisement