For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கர்நாடகா: ஓரினச் சேர்க்கை புகார்- பிரஜ்வல் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது!

09:32 AM Jun 23, 2024 IST | Web Editor
கர்நாடகா  ஓரினச் சேர்க்கை புகார்  பிரஜ்வல் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது
Advertisement

வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது.

Advertisement

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கன்னட சேனலுக்கு நேற்று முன்தினம் இரவு அளித்துள்ள பேட்டியில், “ஜூன் 6-ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் கனிகட்டா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சூரஜ் ரேவண்ணாவை சந்தித்தேன். அப்போது தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். இதனை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்” என்றார். இந்நிலையில் சூரஜ் ரேவண்ணா, ஹொலேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “சூரஜ் ரேவண்ணா பிரிகேட் அமைப்பின் பொருளா ளராக இருக்கும் சிவகுமார் (30), அவரது நண்பர் சேத்தன்(24) ஆகியோர் ரூ.5 கோடி தராவிட்டால் என் மீது பொய் புகார் தரப்போவதாக மிரட்டுகின்றனர்” என்றார்.

இதையடுத்து சிவகுமார், சேத்தன், சேத்தனின் 21 வயதான மனைவி ஆகிய மூவர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரைமறுத்துள்ள சிவகுமார், “சூரஜ்ரேவண்ணா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுக் கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement