For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கர்நாடகா | கோயிலில் சிலிண்டர் வெடிப்பு - 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!

05:44 PM Dec 23, 2024 IST | Web Editor
கர்நாடகா   கோயிலில் சிலிண்டர் வெடிப்பு   9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்
Advertisement

கர்நாடக மாநிலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (டிச. 22) இரவு கோயிலின் அறையில் ஐயப்ப பக்தர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரவு கோயிலில் தங்கிய ஐயப்ப பக்தர்கள் 9 பேரும் உணவு சமைத்து விட்டு எரிவாயு சிலிண்டரை சரியாக அணைக்காததே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவித்தனர். மேலும், ஐயப்ப பக்தர்களான அவர்கள் அனைவரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு கோயிலில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement