For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

12:37 PM Nov 24, 2023 IST | Web Editor
டி கே சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணையை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை பரிந்துரையை திரும்பப் பெறுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

முதல்வர் சித்தராமையா தலைமையில் சட்டப்பேரவையில் நவம்பர் 23 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியதாவது,

கடந்த பாஜக அரசால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் மிக கவனமாக ஆலோசிக்கப்பட்டது.  கடந்த ஆட்சியில் இருந்த அட்வகேட் ஜெனரல் மற்றும் தற்போதைய அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும் பாஜக அரசின் முடிவு தவறானது என தெரிய வந்ததால்,  அதனை திரும்ப பெற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 577 வழக்குகள்
பதியப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கை கூட சிபிஐ விசாரிக்கவில்லை.  அனைத்து வழக்குகளையும் மாநில காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர்.

அவற்றை எல்லாம் கருதியே டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ விசாரணையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளோம் என அவர் கூறினார்.

மேலும்,  2018-ஆம் ஆண்டு பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement