Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சக்தி வாசுதேவனின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘கராத்தே பாபு’ படக்குழு!

நடிகர் சக்தி வாசுதேவனுக்கு ‘கராத்தே பாபு’ படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
05:55 PM Feb 23, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2003ம் ஆண்டு வெளியாக ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரவி மோகம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றிக்கும் பிறகு இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் தனி ஒருவன், மிருதன், டிக் டிக் டிக், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisement

நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே, அவர் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும், ரவி மோகன் என அழைக்குமாறும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ரவி மோகனின் அடுத்த படத்தை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். இப்படம் ரவி மோகனின் 34வது படமாக உருவாகிறது.  இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘கராத்தே பாபு’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான டைட்டில் Announcement டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், நடிகர் சக்தி வாசுதேவனுக்கு ‘கராத்தே பாபு’ படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சக்தி வாசுதேவன் 'பாக்சர் செல்வராஜ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Ganesh BabuKarathey Babumovienews7 tamilNews7 Tamil UpdatesRavi Mohantamil cinema
Advertisement
Next Article