காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா பூச்செரிதல் விழாவுடன் தொடங்கியது. அதில் காரையூர், ஆலம்பட்டி, முரண்டான்பட்டி, சங்கரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : ஜூலை 12-ல் வெளியாகிறது 'இந்தியன் 2'... மே 22-ல் முதல் பாடல் வெளியீடு!
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல், கொட்டும் மழையில நனைந்தபடி, மேள வாத்தியம் முழங்க நடனம் ஆடிக்கொண்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதையடுத்து, திரளான பக்தர்கள் பூத்தட்டு,பால்குடம்
எடுத்துச்சென்று அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். பாதுகாப்பு பணியில் காரையூர்
காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். மேலும், இந்த திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.