தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!
தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கலை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சுற்றுலாதளங்கள் அனைத்திலும் மக்கள் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா நகரமான உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நீலகிரி மலையில் வாழக்கூடிய தோடர், படுகர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு நடனமாடி விழாவை சிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடி போட்டியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் உட்பட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உரியடித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு சாக்கு போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காணும்பொங்கல் தினத்தை முன்னிட்டு
ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அருவிகளில் குளிப்பதற்காக குவிந்தனர்.