தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து - அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை உட்பட தாழ்வான பகுதிகளில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணை உட்பட தாழ்வான பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சிப்பாறை அணையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள் : சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!
இது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; "நாங்கள் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி பாதுகாப்பை பல படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பு இல்லை.
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும்
நெகிழிக் கழிவுகளை அகற்றி உள்ளோம். பேச்சிப்பாறை அணையின் எல்லா மதகுகளையும் இன்று (டிச.17) திறந்து உள்ளோம். அதனை தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறோம்" என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.