கண்ணப்பா டிரெய்லர் வெளியீடு!
சிவத்தொண்டு புரிந்து சிவன் அருளை முழுவதுவமாக பெற்றவர்கள் நாயன்மார்கள். 63 நாயன்மார்கள் உள்ளனர். இவர்களில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலுடன் தொடர்புடைய நாயன்மார் கண்ணப்ப நாயனார். இவர் வேடர் குலத்தில் திண்ணன் என்பவராக பிறந்து, நாத்திகராக இருந்து பின்னர் சிவனடியாராக மாறியவர். வித்தியாசமான அல்லது மாறுபட்ட முறையில் சிவபூஜை செய்து, சிவனுக்காக தனது கண்ணை கொடுத்தவர். அவரின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல கோணங்களில் சினிமாவாக வந்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகனும், பிரபல தெலுங்கு ஹீரோவுமான விஷ்ணுமஞ்சு கண்ணப்பா என்ற பெயரில் அவரின் படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் அக்ஷய் குமார், மோகன்லால், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.