For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி | பிறந்த குழந்தைக்கு தன் பெயரை சூட்டிய "கனிமொழி" எம்.பி!

08:03 AM Dec 25, 2023 IST | Web Editor
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி   பிறந்த குழந்தைக்கு தன் பெயரை சூட்டிய  கனிமொழி  எம் பி
Advertisement

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணியின் குழந்தைக்கு கனிமொழி எம்.பி தன் பெயரை சூட்டியுள்ளார். 

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி-யின் உதவி எண்ணிற்கு கடந்த டிச.21-ம் தேதி மதியம் 3 மணியளவில் கொற்கை ஊராட்சியில் இருந்து அழைப்பு வந்தது.  அந்த அழைப்பில் வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து கர்ப்பிணிப் பெண் அபிஷாவை  மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரசவ தேதி நெருங்கிவிட்டது என்றும் அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

உடனே கனிமொழி எம்.பி அவரின் வாகனத்தை கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.  பின்னர் 3-ம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.   இதனைத் தொடர்ந்து டிச.21-ம் தேதி இரவு 9 மணி அளவில் அபிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணிக்குப் பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துமனைக்கு செல்ல முடிந்தது.  பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும், அவருக்கு மிக்க நன்றி என்று அபிஷா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழி எம்.பி வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரின் பெண்குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.  பெற்றோர்கள் குழந்தைக்கு கனிமொழி எம்.பி-யின் பெறரை வைக்க வேண்டும் என்று விரும்பினர்.  அதன்படி குழந்தையை தான் கையால் வாங்கிய கனிமொழி எம்.பி, பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப 'கனிமொழி' என்று பெயர் சூட்டினார்.

Tags :
Advertisement