சிறுமிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்த கனிமொழி எம்பி | மாணவிக்கு மீண்டும் கிடைத்த கண் பார்வை!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சொக்கப்பழங்கரை கிராமத்தில் கனிமொழி எம்.பி.யின் உதவியால், சிறுமிக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த டிச. 27இல் பார்வையிட்டார். அப்போது, பாா்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு மாணவி ரேவதி என்பரை அவா் காண நோ்ந்தது. அவரை அழைத்துப் பேசிய கனிமொழி எம்.பி.யிடம், ‘தனக்கு கண் பார்வையில் பிரச்னை உள்ளது; அதற்கு மருத்துவச் சிகிச்சை செய்ய உதவ வேண்டும்’ என சிறுமி வேண்டுகோள்விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, இதையடுத்து கனிமொழி, அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி நேன்று வீடு திரும்பிய நிலையில், ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்குச் சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பியும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார்.