For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Suriya45-ல் இணைந்த 'கங்குவா' பட நடிகர்!

02:07 PM Dec 16, 2024 IST | Web Editor
 suriya45 ல் இணைந்த  கங்குவா  பட நடிகர்
Advertisement

'சூர்யா 45' திரைப்படத்தில பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது.

https://twitter.com/DreamWarriorpic/status/1868544531223986401

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லப்பர் பந்து’ பட நடிகை சுவாசிகா, பிரபல நடிகர் இந்திரன்ஸ், நடிகர் யோகி பாபு, நடிகை சிவாதா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 'சூர்யா 45' திரைப்படத்தில பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியாகும் அறிவிப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement