கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடன் இருப்பதாக பரவும் படம் - உண்மை என்ன?
This news Fact checked by Newschecker
கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடனும், சோனியாகாந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் ஆய்வு செய்தது. இது குறித்து விரிவாக காணலாம்.
கங்கனாவை அறைந்த CISF காவலர்
தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுர்-க்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
குல்விந்தர் கவுருடன் ராகுல் காந்தி - பரவும் போலி படம்
கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ”இவள்தான் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.
உண்மை சரிபார்ப்பு
கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
மேலும் திவ்யா மதர்னா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியாகாந்தியுடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே தற்போது கங்கனா கன்னத்தில் அறைந்த CISF வீரர் குல்விந்தர் கவுர் என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.
முடிவு
கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.