For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கந்தசஷ்டி திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06:50 AM Oct 11, 2025 IST | Web Editor
கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி திருவிழா   தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக் 27ஆம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

Advertisement

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2025ம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.11.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement