For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!

01:26 PM Nov 14, 2023 IST | Student Reporter
திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.

Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா ஏழு நாட்கள் நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது.

இதையும் படியுங்கள்:  மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

இந்த நிலையில் தினமும் அதிகாலை 5.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும்.  தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.  மேலும் நாளை நவம்பர் 15-ம் தேதி திருவாபரணம்,  நவம்பர் 16-ம் தேதி வெள்ளிக் கவசம்,  நவம்பர் 17-ம் தேதி சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

நவம்பர் 18-ம் தேதி மாலையில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது.

Tags :
Advertisement