காஞ்சிபுரம் | ஆளுநரை கண்டித்து 1300க்கும் மேற்பட்ட திமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரத்தில் ஆளுநரை கண்டித்து 1300க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேற்று சட்டசபை கூடியதும் தமிழக ஆளுநர் RN ரவி உடனடியாக சட்டசபையை விட்டு வெளியேறி புறப்பட்டுச் சென்றார். இதனை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் காஞ்சிபுரம் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட சுமார் 1300க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு ஆளுநருக்கு எதிராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் எதிரே கோஷங்களை எழுப்பினர்.
“வெளியேறு வெளியேறு ஆளுநரே வெளியேறு, தகுதியில்லை தகுதியில்லை தமிழர்களை இழிவு படுத்தும் ஆளுநருக்கு தகுதி இல்லை. வேஸ்ட் வேஸ்ட் ஆளுநர் வேஸ்ட், பெஸ்ட் பெஸ்ட் திமுக பெஸ்ட்” எனவும் பலவிதமான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் உள்ளிட்ட 1300 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.