காஞ்சிபுரம் | திவ்ய பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம்!
காஞ்சிபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்றது. அப்போது, வடகலை, தென்கலை பிரிவினர் இடையே பிரன்னை ஏற்பட்டது. நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல்களை யார் முதலில் பாடுவது? என்பது தொடர்பாக அவர்கள் இடையே பிரச்னை எழுந்தது.
பின்னர், இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினரையும் பாட்டு பாட அனுமதி அளித்து பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்தனர். இதனையடுத்து இரு தரப்பினரும் இறைவன் குறித்து பாட்டு பாடினர். பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. ஆச்சார்யார்களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்றும் திருவரங்கத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுவோர் தென்கலை என்றும் பொதுவாகக் குறிக்கப்படுகின்றனர்.