For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்! - அம்மன் தங்க அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

08:39 AM Feb 19, 2024 IST | Web Editor
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம்    அம்மன் தங்க அம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா
Advertisement

வெள்ளை பட்டு உடுத்தி கையில் வீணை ஏந்தி தங்க அம்ச வாகனத்தில் வீதி உலா வந்து காமாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Advertisement

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மூன்று
நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நான்காம் நாளான நேற்று இரவு காமாட்சி அம்மன் தங்க அம்ச வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு
காட்சியளித்தார்.

இதையும் படியுங்கள் : குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் - விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!

இதையடுத்து, வெள்ளை பட்டு உடுத்தி கையில் வெள்ளி வீணை வைத்தவாறு காமாட்சியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தங்க அம்ச வாகனத்தில் காமாட்சியம்மன் வெள்ளை பட்டு உடுத்தி தங்க வைர
ஆபரணங்கள் சூடி, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பல வண்ண மலர்கள் கோர்த்த
மாலை அணிந்து, தலையில் கிரீடம் தரித்து,கையில் வெள்ளி வீணை இசைத்தவாறு
காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகள் வலம் வந்தார். இந்த வீதி உலா நிகழ்ச்சியில், வழியெங்கும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மங்கல மேள தானங்கள் ஒலித்தவாறு சாமி வீதி உலா நடைபெற்றது.

Tags :
Advertisement