'தக் லைஃப்' ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்த கமல் - நன்றி தெரிவித்த திரையரங்கு உரிமையாளர் சங்கம்!
தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்போதும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை அதை கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் எங்கள் அன்பிற்குரிய கமலஹாசனுக்கும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
தக் லைஃப் திரைப்படத்தை OTT வெளியீடு 8வாரம் கழித்து மட்டுமே என்று தாங்கள் அறிவித்து செயல்படுத்தியது மட்டுமல்லாமல் இதன் மூலம் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தொல்நோக்கு பார்வையுடன் கூறிமாருப்பது திரையரங்கு உரிமையாளர்களாகிய எங்கருக்கு மிகவும் மகிழ்ச்சி அறிக்கிறது. தங்கள் வழியில் அனைத்து தயாரிப்பாளர்களும் சிந்தித்து இந்த முடிவை அனைத்துப் படங்களுக்கும் அமுல் படுத்தும்படி எங்களது அன்பு வேண்டுளை வைக்கிறோம்”
இவ்வாறு தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.