கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’: செர்பியாவில் படப்பிடிப்பு!
நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு செர்பியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் ‘தக் லைஃப்’. நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் மீண்டும் இணையும் படம் தக் லைஃப். இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இப்படத்தில் ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜன.24-ம் தேதி துவங்கியது. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம், இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் சிவா ஆகியோர் செர்பியா சென்றுள்ளனர். அங்கு ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.