Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகின் முதல்முறையாக 12K தரத்தில் தயாராகியுள்ள கமல்ஹாசனின் “ஹேராம்” திரைப்படம்!

12:27 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ஹேராம்’ திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான பிரசாத் கார்ப் 12k தரத்தில் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரசாத் கார்ப் நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12k தரத்தில் படத்தினை ரீகிரியேட் செய்துள்ளது படக்குழு. அந்த அறிவிப்பில், “ஹே ராம் (2000), புகழ்பெற்ற கமல்ஹாசன் வடிவமைத்த நினைவுச்சின்னம், இப்போது 12K தரத்தில் மீண்டும் பிறந்துள்ளது. பிரசாத் நிறுவனம், சினிமா வரலாற்றை என்றென்றும் பாதுகாத்து வருவதில் கமல்ஹாசனுடன் இணைகிறது” என பதிவிடப்பட்டுள்ளது.

இதனால் படத்தை ரீரிலீஸ் செய்வார்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் 12k தரத்தில் ஹேராம் படத்தினை காண்பதற்கு திரையரங்குகள் எங்கே உள்ளது எனவும் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். 

Tags :
cinema updateHey RamKamal haasanmovieNews7Tamilnews7TamilUpdatesRKFI
Advertisement
Next Article