For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ம் தேதி ரீ-ரிலீஸ்!

05:16 PM Jun 14, 2024 IST | Web Editor
கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21 ம் தேதி ரீ ரிலீஸ்
Advertisement

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘குணா’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘குணா’. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவருகின்றனர்.

அதற்கு உதாரணம் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும், ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல’ வசனமும் ரசிகர்களை ஈர்த்தது. படம் வெளியாகி இப்பாடலும், அதன் காட்சிகளும் மீண்டும் ‘குணா’ வைப்பை இன்றைய தலைமுறையிடத்தில் ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் உற்சாக வெற்றியைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு ‘குணா’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் ‘குணா’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.

Tags :
Advertisement