For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமல்ஹாசன் பிறந்தநாள்: கமலா திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆன 'விருமாண்டி'!

09:18 PM Nov 06, 2023 IST | Web Editor
கமல்ஹாசன் பிறந்தநாள்  கமலா திரையரங்கில் ரீ ரிலீஸ் ஆன  விருமாண்டி
Advertisement

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு கமலா திரையரங்கில் 'விருமாண்டி' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார்.  நடிப்பில் புது, புது பரிணாமங்களை கொண்டு வந்த இவர் நடிகர்,  பாடகர்,  தயாரிப்பாளர்,  இயக்குநர் உள்ளிட்ட பண்முகத்தண்மை கொண்டவர். இவரை திரைத்துறையினர் உலகநாயகன் என்று அன்போடுஅழைத்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது  70வது பிறந்தநாளை நாளை (நவ. 7 ) கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு,  2004ம் ஆண்டு வெளியான ’விருமாண்டி’ திரைப்படம் கமலா திரையரங்கில் திரையிடப்படுகிறது.  இந்த படத்திற்கான டிக்கெட்டின் விலை ரூ.49க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருமாண்டி திரைப்படம் இன்று மாலை 7.15 முதல் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.  நவம்பர் 8ம் தேதி வரை இப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் தலைமையில் கமலா திரையரங்கம் முன்பு இப்படத்தின் ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.  இதில் ரோபோ சங்கர் மற்றும் கவிஞர் சினேகன்-கன்னிகா தம்பதி கலந்து கொண்டனர்.  இந்த கொண்டாட்டத்தில் சினேகன்-கன்னிகா தம்பதி ரசிகர்களுடன் இணைந்து தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags :
Advertisement