For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேப்டன் விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!

04:21 PM Dec 28, 2024 IST | Web Editor
கேப்டன் விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்
Advertisement

கேப்டன் விஜயகாந்த் பெரும் தாக்கத்தை உருவாக்கி விட்டு சென்றுருக்கிறார் என ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று டிச.28. ஆகையால் தேமுதிக சார்பில் பிரபலங்கள் மற்றும் தலைவர்களுக்கு நினைவு நாள் விழாவில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது. இவர்களின் அழைப்பை ஏற்று காலை முதலே தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு தளத்தில் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் கமல்ஹாசன், பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிருக்கும் கேப்டன் விஜயகாந்துக்கு நினைவஞ்சலி எனவும் எனது அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்கு பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன் எனவும், வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags :
Advertisement