For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்கி திரைப்படத்தில் வில்லனாகும் கமல்ஹாசன்?

09:37 AM May 20, 2024 IST | Web Editor
கல்கி திரைப்படத்தில் வில்லனாகும் கமல்ஹாசன்
Advertisement

‘கல்கி 2898 ஏடி’ நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.  இத்திரைப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி,  கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இத்திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

முன்னதாக ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டு இருந்தது.  இதனையடுத்து,  இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது.  படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு அஸ்வத்தாமா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.  இத்திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.  இந்த நிலையில்,  இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதல் பாகத்தில் 20 நிமிடங்களும்,  இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்களும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இத் திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement