பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்ததை அடுத்து, நடிகை ரம்யா கிருஷ்ணன் அல்லது நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இதன் முதல் சீசன் தொடங்கியது. கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசன்களாக மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமல்ஹாசன். சுமார் 7 ஆண்டுகள் கழித்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
கமல்ஹாசன் இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்க போகிறது? அவருக்கு பதில் எந்த பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? இப்படியான பல கேள்விகள் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து எழும்ப தொடங்கியது. இணையவாசிகளும் இந்த பிரபலம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாக, கமல்ஹாசன் சில வாரங்கள் ஓய்விலிருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த சூழலில் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் பிக்பாஸ் - 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.