"கல்லூரும் காத்து என் மேல..." - வெளியானது #VeeraDheeraSooran படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமின் 62வது திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.17ம் தேதி அவரது 62வது திரைப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
Here is my first single for the year … from #Veeradheerasooran https://t.co/lxXJKA3JtX
— G.V.Prakash Kumar (@gvprakash) January 11, 2025
முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.