For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

10:13 AM Jun 20, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்  விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Advertisement

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக  கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.  இந்நிலையில்,  நேற்று முன் தினம் அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.  அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி ஜிப்மர்,  கள்ளக்குறிச்சி,  சேலம்,  விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிலையில் இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருந்தது.  மேலும்,  பலர் சிகிச்சையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியதில் பாக்கெட்‌ விஷசாரயம் விற்ற கோவிந்தராஜன் என்ற கண்ணுகுட்டி,  தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது கோவிந்தராஜன் மனைவி ரேவதி கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த விவகாரத்தில் இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து இதுவரை 900 லிட்டர் விஷசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, மெத்தனால் விற்பனை செய்த சின்னத்துரை என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன? என்பது பற்றி விசாரணை செய்ய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது.  இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.  விஷச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படும் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  விசாரணையை துரிதப்படுத்த சிபிசிஐ டிஐஜி அன்புவும் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார்.

தற்போது, கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் கண்ணுகுட்டி, தாமோதரன், ரேவதி ஆகிய 3 பேர் மீது மெத்தனால் கலந்த சாரயத்தை விற்பனை செய்தது, சட்டவிரோதமாக கலப்படம் செய்து விற்பனை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 328 , 304(2)IPC, 4(1)(i), 4(1)(A) of Tamilnadu prohibition act என நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement