கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம், ஆளூநரை சந்தித்து விஷச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படியுங்கள் : 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
இதனிடையே,விஷச்சாராயம் மரணங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது விஷச்சாராயம் மரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
- அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்திருந்தது.
- விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணமும் சிகிச்சை பெற்று வருவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை 3 வழக்குப்பதிவு செய்துள்ளது.
- சிபிசிஐடி காவல்துறை இதுவரை 132 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.