கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!
ராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 15,000 பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பனார்
கோயில் உள்ளது. போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வாரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் முப்பூஜை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள் ; கிராமி 2024 - இந்தியாவின் சக்தி இசைக்குழு விருது வென்று அசத்தல்..!
இந்த விழாவில் கள்ளவழி மலை மேல் இருக்கும் கருப்பனார் கோயிலில் சிறப்பு
பூஜைகள் செய்யப்பட்டு, ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சாமிக்கு விசேஷ பூஜையும் செய்யப்பட்டது. இவ் விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15,000 மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய பங்கேற்றனர். மேலும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, ஆடு, கோழி மற்றும் பன்றி கொண்டு வந்து சாமிக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து, 2500 கிலோ கறி, 1000 கிலோ பச்சரி சமைத்து கிராமம் செழிக்க 300 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் தெய்வ வழிபடும் நிகழ்ச்சியான முப்பூஜை திருவிழாவில், 1000 கிலோ ஆட்டுக்கறி, 1400 கிலோ பன்றி கறி, 100 கிலோ கோழிக்கறி என 2500 கிலோ
சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் விருத்தில் கலந்து கொண்டனர்.