For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#KalaignarKarunanidhi மாநில உரிமைகளுக்கு போராடியவர் ; வேற்றுமையில் ஒற்றுமையை காத்தவர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

08:56 PM Aug 18, 2024 IST | Web Editor
 kalaignarkarunanidhi மாநில உரிமைகளுக்கு போராடியவர்    வேற்றுமையில் ஒற்றுமையை காத்தவர்   மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர், வேற்றுமையில் ஒற்றுமையை பேணிக் காத்தவர் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

கலைஞர் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகல் சென்னை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் கலைஞர் நூற்றாண்டு நாணய  வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் தொடங்கியது.  இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு  சிறப்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனர். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசத் தொடங்குவதற்கு முன்பாக, அனைவரையும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்தச் சொன்ன ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்த விழா மேடையில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது..

“ பல தேசியத் தலைவர்களுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தார். அப்படி நல்ல நட்புறவு இருந்தும் அவருடைய அரசியல் கொள்கைகளில் எந்த விதமான மாற்றங்களையும் அவர் ஏற்படுத்தவில்லை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு மாநிலத்தின் தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். அவர் முன்வைத்த ஜனநாயக கூறுகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைக்கப்பட்டிருந்த பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்தது. அரசியல் கட்சிகள், கொள்கைகளைக் கடந்து நாட்டின் வளர்ச்சிக்கானதாக நமது திட்டங்கள் இருக்க வேண்டும். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைத்த தமிழக அரசுக்கு நன்றி.

வரலாற்றில் அழிக்க முடியாத பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.  நாட்டின் கலாசாரம் மற்றும் சமூகநீதியின் அடையாளமாக கருணாநிதி திகழ்கிறார். அவரது பொதுநல தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து அவர் போராடியவர் . வேற்றுமையில் ஒற்றுமை பேணிக் காத்தவர்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Tags :
Advertisement