Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

02:01 PM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைப்பயணம், சாதனைகளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வரும் 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அழைப்பு…

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்த நிலையில்,  மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Tags :
AnnouncementAssociationChennaiChennaiFloodReliefChennaiFloods2023chennairainCycloneMichuangDMKflood reliefKalaignar 100MichaungStormMKStalinpostponementTamil Film Producers
Advertisement
Next Article