’கை கோர்த்திட அகிலம் அதிருதா..!’ ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ வெளியீடு..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் ரஜினி கால் பதித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. தற்போது ரஜினிகாந்த் நெலசன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. மேலும் இப்படம் 2027 ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.