பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும்,தொடக்க விழா நிகழ்ச்சியின் போது டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுடன் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இதனிடையே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 28 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நீளம் தாண்டுதல் வீரரான ஆல்ட்ரின், தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் ஆறு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.