For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘காதலிக்க நேரமில்லை’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

01:29 PM Jun 03, 2024 IST | Web Editor
‘காதலிக்க நேரமில்லை’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Advertisement

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி,  நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

Advertisement

‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் First Look அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

விரைவில் இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் ஒலிக்க, ஜெயம் ரவி, நித்யா மேனன் இருவரும் இருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement