For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு!

01:49 PM Jun 01, 2024 IST | Web Editor
ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே  பாப் குழு
Advertisement

ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு.

Advertisement

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் எனும் காபி நிறுவனம் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது.  1971 ஆம் ஆண்டு ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள்,  கார்டன் போவ்கர் ஆகியோர் சான் பிரான்சிசுகோ பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் என அனைவரும் கூட்டாகச் சேர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர்.

இதையடுத்து,  உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.  இவ்வாறு இருக்கும் நிலையில்,  தென் கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஜின்,  சுகா,  ஜே-ஹோப்,  RM, ஜிமின்,  V,  ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய கே - பாப் குழுவுடன் ஸ்டார்பக்ஸ் காபி இணைந்து உள்ளது.

இதையும் படியுங்கள் : இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளியாகும் ‘இந்தியன் 2’ பாடல்கள் – படக்குழு அறிவிப்பு!

இந்நிலையில்,  தற்போது கே - பாப் குழுவுடன் ஸ்டார்பக்ஸ் காபி இணைந்தால், கே - பாப் குழுவின் சமூக வலைதள பக்கத்தின் பின்தொடர்பாளர்கள் (followers) அதிரடியாக குறைந்துள்ளது.  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பாக ஸ்டார்பக்ஸின் கடந்தகால நடவடிக்கைகளில் பின்விளைவாக தான் தென் கொரியாவில் இந்த நிறுவனத்தை
புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக,  கடந்த 30 நாட்களில் 6,74,370 பின்தொடர்பவர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement