For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஜஸ்டின் பீபர்- வைரல் வீடியோ!

07:17 AM Jul 07, 2024 IST | Web Editor
ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஜஸ்டின் பீபர்  வைரல் வீடியோ
Advertisement

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர் பாடல் கச்சேரி நடத்தினார்.

Advertisement

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்றது.

சங்கீத் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.

ஜஸ்டின் பீபர் தனது ஹிட் பாடலான ‘பீச்ஸ்’ பாடலை மேடையில் பாடும்போது, அங்கே நின்று கொண்டிருந்த நடிகை திஷா பதானி, பாடலை வெகுவாக ரசித்து உற்சாகத்தில் ஆட்டம் போடத் தொடங்கினார். தங்கம் மற்றும் வெள்ளை நிறத்தில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்திருந்த திஷா பதானி உற்சாக ஆட்டம் போட்டதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.

ஜஸ்டின் பீபருக்கு அரிய வகை நரம்பியல் நோய் இருப்பதால், உலகளாவிய சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, அண்மை காலங்களில் மிகவும் குறைவான நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
Advertisement