Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூனியர் மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் நாளை தொடக்கம்!

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நாளை தொடங்குகிறது.
08:28 PM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோ) மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நாளை (ஜன.18) தொடங்குகிறது.

Advertisement

இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் மலேசியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன.

நாளை மொத்தமாக 6 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. மற்ற லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து - அயர்லாந்து, சமோவா - நைஜீரியா, வங்காளதேசம் - நேபாளம், பாகிஸ்தான் - அமெரிக்கா, நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.

இந்திய அணி விவரம்: நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே (துணை கேப்டன்), ஜி திரிஷா, கமலினி ஜி (விக்கெட் கீப்பர்), பவிகா அஹிரே (விக்கெட் கீப்பர்), ஈஸ்வரி அவசரே, மிதிலா வினோத், ஜோஷிதா வி ஜே, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி.ஷப்னம், வைஷ்ணவி எஸ்.

Advertisement
Next Article