Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை: கைதான ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

03:12 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி இன்று முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதே போன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்,  தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி இவ்வாறு பேச மாட்டேன் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் நடத்தி வரும் யூ டியூப் சேனலை மூடக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :
cyber crime policeFelix GeraldGanjaSmugglingCaseMadrasHighCourtSavukkuSankar
Advertisement
Next Article