Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

13 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம்!

13 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
06:52 PM Feb 13, 2025 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  இந்த கட்டிடத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை விதியின்படி கோயிலுக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும். ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை செலுத்தாமல் சட்டவிரோதமாக கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் வாடகை பாக்கி 54 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்றும் திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலக வாடகைக்கு பாக்கி ரூ 54,35,660 அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செலுத்திவிட்டது என அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி,  “திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் கடமையைச் செய்வதில்லை” என கண்டனம் தெரிவித்து  “திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கடமைப்பட்டுள்ள அலுவலர்களே வாடகை தொகையை செலுத்த காலந்தாழ்த்தியது ஏன் ?” என கேள்வி எழுப்பி,  “வழக்கு தொடர்ந்த பின்பு வாடகை பாக்கி செலுத்தப்பட்டதற்காக ஏன் அபராதம் விதிக்கக்ககூடாது ?” என்று கருத்து தெரிவித்து வாடகை பாக்கி முழுமையாக செலுத்தப்பட்டதால் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Tags :
Hindu Religious Charities DepartmentMadurai courtSubramania Swamy Templetiruchendur
Advertisement
Next Article