Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண் ஊடகவியலாளர் மர்ம மரணம்... #Bangladesh-ல் நடந்தது என்ன?

04:57 PM Aug 28, 2024 IST | Web Editor
Advertisement

வங்காள தேசத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஏரியில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

Advertisement

வங்காள தேசத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி ஆசியராக பணியாற்றி வந்தவர் சாரா ரஹனுமா. 32 வயதான இவர் இன்று டாக்காவில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. காவல் கண்காணிப்பாளர் பச்சு மியா, அவரது உடல் மீட்கப்பட்டதை உறுதி செய்தார்.

ஏரியில் இருந்து மீட்கப்பட்ட அவரது உடல் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு, சாரா ரஹனுமா அதிகாலை 2:00 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். சாரா தனது மரணத்திற்கு முன்னதாக, நேற்று இரவு பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில், "உன்னைப் போன்ற ஒரு நண்பன் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பார். விரைவில் உன் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவாய் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக நிறைய திட்டமிட்டுள்ளோம் என்பது எனக்குத் தெரியும். மன்னிக்கவும், என்னால் நமது திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்." என்று அவர் எழுதினார். இதற்கு முந்தைய பதிவில் "மரணத்திற்கு நிகரான வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்" என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சாரா ரஹனுமாவின் கணவர் சையத் ஷுவ்ரோ இதுகுறித்து கூறுகையில், "அவர் வேலைக்குச் சென்றார், ஆனால் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அதிகாலை 3 மணியளவில் அவர் ஏரியில் குதித்ததாக தகவல் கிடைத்தது" என்றார். இதற்கிடையே, வெளியேற்றப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனும் அமெரிக்காவில் உள்ளவருமான சஜீப் வசேத், "இது கருத்து சுதந்திரத்தின் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதல்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
BangladeshdeathinvestigationjournalistPolice
Advertisement
Next Article