For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர் - இணையத்தில் வைரல்!

07:55 AM Jul 25, 2024 IST | Web Editor
ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர்   இணையத்தில் வைரல்
Advertisement

 ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஹாலிவுட்டில் இயக்குநர் டூட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ்  வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் 'ஜோக்கர்.  முதல் பாகமான 'ஜோக்கர்'  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகம்  திரைக்கு வரவுள்ளது. இதற்காக  உலகம் முழுக்க ரசிகர்கள்  காத்திருக்கின்றனர்.

ஜோக்கர் திரைப்படம்  உலகளவில் $1 பில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்த முதல் R-ரேட்டர் திரைப்படம்  ஆகும். கதையின் ஹீரோவான ஜாக்குவன் பீனிக்ஸ்  மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலைஞன்.
அந்த கலைஞனை ஒரு கட்டத்தில் குடும்பமும் சமூகம் எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையால் சொன்னது இப்படம்.

ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்து அசத்தியதற்காக ஜாக்குவன் பீனிக்ஸுக்கு சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. இதற்கிடையில், ஜோக்கர் 2 படத்தின் படப்பிடிப்பிலிருந்து சில வீடியோக்கள் கடந்த வருடம் சமூக ஊடகங்களில் வைரலாகின, இதில் ஜோக்கரின் கெட்டப்பில் லேடி காகாவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இயக்குனர் டோட் பிலிப்ஸ் இன்ஸ்டாகிராமில் புதிய ஜோக்கர் 2 படத்தைப் பகிர்ந்து, "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு சவாரி செய்தோம். நிறைய அருமையான நினைவுகள். நிறைய வர உள்ளன." என பதிவிட்டுள்ளார்.

ஜோக்கர் 2 திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜோக்கர் 2 டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Advertisement