For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!” - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி!

01:28 PM Jan 07, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35 000 கோடி முதலீடு செய்ய உள்ளது ”   உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி
Advertisement

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வாயிலாக பேசினார். 

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று ( 07.01.2024) உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் தொடங்­கியது. இந்த நிகழ்வில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.  இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன.

உலக முத­லீட்­டாளர் மாநாட்­டின் தொடக்க விழாவை பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டிருந்தது.  இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்தார். பின்னர் இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பல்வேறு தொழிலதிபர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வாயிலாக  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.

அப்போது முகேஷ் அம்பானி பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம். 3.5 கோடி பயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம். உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்படவுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.

Tags :
Advertisement