Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தின் ஒய்யாரம் பாடல் வெளியானது!

05:08 PM Nov 13, 2023 IST | Student Reporter
Advertisement

ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒய்யாரம் எனும் பாடல் வெளியானது.

Advertisement

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது.  இத்திரைப்படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டது.  இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா,  நிமிஷா சஜயன் மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இந்த படத்தின் மாமதுர பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது x தளத்தில் பதிவிட்டார்.  'மாமதுர அன்னக்கொடி' என தொடங்கும் இந்த பாடலை தனது மகள் தீ உடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

அதையடுத்து இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒய்யாரம்' எனும் பாடல் வெளியாகியுள்ளது.   விவேக் எழுத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை மீனாட்சி இளையராஜா,  மீனாட்சி சந்தோஷ்,  ஆதித்யா ரவிந்திரன்  மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.   இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Tags :
Aditya RavindrancinemaJigarthanda Double Xkarthik subbarajMeenakshi IlayarajaMeenakshi Santoshnews7 tamilNews7 Tamil Updatesraghava lawrenceSantosh Narayanansj suryaVivek Chisho
Advertisement
Next Article