For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜார்க்கண்ட் தேர்தல் | "மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

07:26 PM Nov 23, 2024 IST | Web Editor
ஜார்க்கண்ட் தேர்தல்    மக்களாட்சிக்கும்  மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி    முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து
Advertisement

ஜார்க்கண்ட் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும் தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது. அதன்படி, தற்போது வரை ஆளும் ஜேஎம்எம் கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம், மீண்டும் ஜேஎம்எம் கூட்டணியே ஆட்சியமைக்கும் என உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிரா தேர்தல் | “நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம்” – பிரதமர் நரேந்திர மோடி!

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

"ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக உருவாக்கினாலும், அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1860309483110662626

Tags :
Advertisement