நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.57, 600 விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வார தொடக்கத்திலிருந்து விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து, ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : உ.பி.யில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு | வன்முறையால் 3 பேர் உயிரிழப்பு – நீடிக்கும் பதற்றம்!
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,200-க்கும், சவரனுக்கு ரூ.800 சரிந்து ஒரு சவரன் ரூ.57,600-க்கும் விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.