For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

JEE மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
07:56 PM Feb 11, 2025 IST | Web Editor
jee மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

Advertisement

2025ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் (JEE Main) முதல் கட்ட தேர்வு ஜனவரி 22 தொடங்கி ஜனவரி 29 தேதி வரை  நடைபெற்றது. இத்தேர்வில் 12.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 14 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுனய் என்ற மாணவன் 99.99% மதிப்பெண்களுடன் 24 வது இடத்தை பிடித்துள்ளார். இதில் 13 பேர் மாணவர்களும், ஒரு மாணவியும் அடங்குவர். மாணவர்கள் jeemain.nta.nic.in. என்ற இணைய முகவரியில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement