அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ்! இந்தியாவுடனான தொடர்பு பற்றி தெரியுமா?
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான ஜேம்ஸ் டேவிட் வான்ஸ், இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர் என்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் போட்டியிடுவார் என்று டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளரான ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கிறது.
யார் இந்ந ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்?
ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் ஓஹியோ பகுதியில் இருந்து முதன்முறை செனட்டராக இருப்பவர். இவர் மத்திய மேற்கு பகுதியில் வலுவான செல்வாக்கு பெற்றவர். ஜேம்ஸ் டேவிட் வான்ஸின் குழந்தைப் பருவம் மிகவும் வறுமையான நிலையிலிருந்தது.
வான்ஸ் தனது 19வது வயதில் ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சேர்ந்தார். அதன் பின்னர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார். நான்கு ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு, வான்ஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் முதலீட்டு ஆலோசகராக இருந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : நீலகிரிக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இதற்கிடையே 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து பதிவிட்டிருந்தார். பின்னர், ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் டொனால்ட் ட்ரம்பை விமர்சித்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலானது. குறிப்பாக, டொனால்ட் ட்ரம்பை 'அமெரிக்காவின் ஹிட்லர்' என்று விமர்சித்தார்.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும்,ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் “ஹில்பில்லி எலிகி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.